Pages

Sunday 29 November 2009

பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும் பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும் ........

பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும்
இதுதாண்டா உன் ஜோடின்னு மனசு சொல்லணும்
இதயத்தில் ஏறி உட்கார்ந்து எனை இம்சிக்கணும்
தூக்கம்கெட்டு அவள் நினைவுகள் எனை வறுதெடுக்கணும்
அவள் நினைவோடேயே மனசு அலையணும்
மறுபடி எப்போ பார்ப்பேன்னு எம்மனசு தவிக்கனும்
இந்த சின்ன ஆசைகள் எல்லாம் ஒரு பொழுது
கேள்விகளையும் பதில் அற்றவைகளாகவும் இருந்தன.....

முதற் பார்வையிலேயே பிடித்தது
உன் ஜோடின்னு மனசு சொன்னது
உன் நினைவுகள் எனை இம்சித்தன
அலை பாய்ந்த என் மனசு
உன்னை நினைத்து தினமும் ஏங்கியது
உன்னை பார்த்த பின்பு இவை எல்லாம் நிகழ்ந்தது
thodarum..

Saturday 21 November 2009

ஒரு சந்திப்பு...........

ஒரு சந்திப்பு...........
இனியவை, உங்கள் மனதிற்கு இனியவை நினைக்க நினைக்க இக்கணமும் இனிப்பவை, எண்ணும் போதெல்லாம் மனதில் ஒரு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உண்டு பண்ணுபவை எவை என்று கேட்டால் ஓராயிரம் காரணங்களை சுட்டிக்காட்டுவீர்கள் முதற் காதல் தொடக்கி முதலிரவு வரைக்கும் அசை போடுவீர்கள்... ஆனால் பிரிந்து சென்ற நண்பர்களின் தொடர்பு, உருவம் மாறுகின்ற வயதில் பிரிக்கப்பட்டு ஆள் அடையாளமே 100 வீதம் மாறி போயிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் 14 வருடங்கள் கழித்து அந்நிய மண் ஒன்றில் என்னை அடையாளம் கண்டு ஆரத்தழுவிய அந்த கணப்பொழுது என்னை கண்டு கொண்ட போது அவன் அடைந்த ஆனந்தம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களை ஒன்றாகி விட்டது... ஆயிரத்து தொள்ளயிரத்து தொண்ணூற்று ஐந்து ஜப்பசி பிரிந்த நாங்கள் 2009 நவம்பர் இல் சந்தித்தோம் ... அந்த நண்பனின் பெயர் கோகிலன் ..........................

Monday 16 November 2009


வாடிப் போவதின் வேதனை பற்றி
மடிந்து போகும் பூக்களிடம்
கேட்காதீர்கள்...............
என் காதலிடம் உரத்து கேளுங்கள்..
மொட்டு நிலையிலிருந்தே கூறும்...
வேதனையின் சோகம் பற்றி...

கஸ்ரோ

Saturday 14 November 2009

வந்தேன் உனக்காக


பூச்செண்டு கொண்டு வந்தேன்

பூந்தளிரே உனக்காக

பூரிப்புடன் வாங்கி வைத்து

புறமுதுகு காட்டி சென்றாயே...


மாலை கொண்டு வந்தேன்

மாங்கிளியே உனக்காக

மனமகிழ்ந்து சூடினாயே - இன்று

மலர் பாடை கட்டினாயே எனக்கு...


பால் பழமும் கொண்டு வந்தேன்

பசும் மானே உனக்காக

பாங்குடனே அருந்தி விட்டு

பாதை மாறி சென்றாயே.....


இன்னிசை கீதம் இசைத்து வந்தேன்

இசைகுயிலே உனக்காக இசை கேட்டு

இசையோடு வாழ்ந்து

இழவு காத்த கிளியக்கினாயே இன்று...


கஸ்ரோ

Saturday 7 November 2009


பகுத்து அறியும் வயதிற்கு முன்பே...

பனை மரத்து வாசம் மனதில் பதியும் முன்பே...

பதறி அடித்து பண்ணை பாலம்

மீதாகஓடி வந்தது

நிழலாய் மனதில் நிற்கிறது..

எவர் செய்த குற்றமோ -

இல்லைநான் செய்த குற்றமோ..

என் கிராமத்து மணம்-

என்னில் இருந்து

மறக்கடிக்கப்பட்டது...
( மணம் வீசும்.....)
கஸ்ரோ