Pages

Wednesday 23 September 2009

வேதனையின் சோகம்


வாடிப்போன வேதனை பற்றி
மடிந்து போகும் பூக்களிடம் கேட்காதீர்கள்...........
என் காதலிடம் உரத்து கேளுங்கள்
மொட்டு
நிலையிலிருந்தே கூறும் வேதனையின் சோகம் பற்றி......
கஸ்ரோ
.

முதல்பார்வை .......


உன் திருமணத்திற்கு பின்னான உன் வாழ்விற்கும் தனித்து விடப்பட்டதிட்கு பின்னான என் வாழ்விற்கும் பல நிலைகள் உண்டு இப்போ... நாம் இருவரும் காதலித்த போதும் நான் இப்போதும் உன்னை காதலிக்கின்ற போதும் பல நிலைகள் உண்டு..... ஆனாலும் நிலையான ஒரு நிலை நிரந்தரமாய் உள்ளது.. அது நிரந்தரமாய் எப்போதும் இருக்கும் அது எனை நோக்கிய உந்தனது
முதல்பார்வை
.......
கஸ்ரோ
.....

Saturday 12 September 2009

என்னவளே...............

என்னவளே எனக்காக மணமாலை
வாங்கி வருவாய் என காத்திருந்தேன்
காலங்கள் கழிந்ததே தவிர
கன்னியுன்னை காணவில்லை...
வந்தாய் எனக்காக மாலையுடன்...
அது என் கல்லறைக்கே அர்ப்பனமகியது
கஸ்ரோ

Tuesday 1 September 2009

மறக்க முடியுமா...? அந்த நாட்களை....


மறக்க முடியுமா...? அந்த நாட்களை....
மறக்க முடியுமா...? அந்த நாட்களை....
மத்தியத்து நண்பர்கள்.....
கல்வியினை தவிரஏனைய அனைத்தையும்
கற்க சென்ற நாட்கள்..
மத்திய தாயின் மடியில்
புரண்டு விளையாடிய அந்த நாட்கள்
பள்ளி ஆசிரியர்களிடம் படிக்க மறுத்து
பல பாடம் படித்த நாட்கள்..........
இப்போ நினைத்தால் கவலை வருகின்றது
அறிவற்ற நிலையில் ஆசிரியர்களுடன்
அடிதடிக்கு சென்ற நாட்கள்
இப்போ புரிகின்றது..
ஆசிரியர்கள் அடாவடி செய்தாலும்
அடங்கி போக வேண்டுமென்று
இப்போ நன்றாக புரிகின்றது..
வேம்படி பிள்ளைகளுக்கு பின்னால் சென்றது....
சுண்டிகுளிக்கு பின்னால் சுற்றி திரிந்தது...
நண்பனுக்கு உதவி..நட்பிற்கு உதவி... என்று...
நாய் மாதிரி.. நாலாபக்கமும் நடமாடியது...

மூலையில் இருந்த என்னை
முன்னிலைப் படித்தி விட்ட
பிரேம்குமார் மிஸ்.......
தட்டிகொடுத்து நிமிர வைத்த....
ஓங்கார மூர்த்தி சேர்..........
ஜெயக்குமார் சேர்......
நன்றாக இருப்பாய் என நன் மனதோடு(/??) வாழ்த்தும்
ஜெயசீலன் சேர்......
வம்பு வரதன்...
சகுனி சந்திரகுமார்....
மறக்கமுடியுமா???
மத்தியத்து நினைவுகளை.....

முனியப்பரில் களித்த பொழுதுகள்...
சண்டைகளுடன் கூடியே வாழ்ந்தாலும்
நட்புடன்வாழ்ந்த நிமிடங்கள்
போர்ஸ்டார் இற்காக போராடிய பொழுதுகள்
சாதனை கழகத்தில் இருந்த
சந்தோஷமான காலங்கள்மறக்க முடியுமா?
நண்பர்கள் தம்பிகள் என களித்தகனாக் காலங்கள்....
பிரதாப் கமி கீதா கர்சன் சுகந்தன் சுசந்தன்
மகிந்தன் கிறிஸ்டி கிச்சான் கிரி சிவா
வெடி ஜெயதாஸ் மயூ ரீகன் அரவிந்தன்
அபிசேகன் மற்றும் பலர் மறக்க முடியுமா...?
கஸ்ரோ