Pages

Sunday, 30 August 2009

உரிமை......


வீணையிடம் உறவாட

விரல்களுக்குதனே உரிமை...

விளக்குடன் உறவாட

விட்டில்களுக்கு தானே உரிமை......

உன் விழிகளை காட்டி

எனை விட்டில் ஆக்கியது ஏன்?


கஸ்ரோ

யார் மனசில யாரு?


யார் மனசில யாரு?

என் மனசுல நீ

உன் மனசுல நான்

எம் இருவரின் மனசிலும்

நம் எதிகாலம்--அது அப்போ....

இப்போ உன் மனசில

உன் கணவன்,பிள்ளைகள்.

நீயும் என் காதலும்...

என் மனசில் இப்போதும்.....

நிரந்தரமாய்.........

கஸ்ரோ

Saturday, 29 August 2009

மோசமான நிமிடம்.......


உலகத்திலேயே மிக மோசமான விடயம்

நமக்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு

பிரிந்து செல்வதுதான்..........

அதிலும் நாம் காதலித்த பெண்

"நீ வேணாம் என்னை மறந்திடு"

என்று சொல்வாங்களே அதுதான்

மிக மிக மோசமான நிமிடம்.......

கஸ்ரோ

எனக்கொரு கல்லறை வேண்டும்



எனக்கொரு கல்லறை வேண்டும்


யாரவது அமைத்து தாருங்கள்


வேதனைகளை தாங்கிய பொழுதுகள்


சோதனைகளை கொண்ட வாழ்க்கை


தோல்விகள் அனுபவித்த கணங்கள்


ஏமாற்றங்களாய் அமைந்த நிமிடங்கள்


துரோகங்களையே சந்தித்த என் மனது


வந்த வேகத்தில் திரும்பிய உறவுகள்


காற்றாகி போன பாசாங்கு வார்த்தைகள்


வெறுமையாகி போன எனது காதல்


கண்ணீராய் போன எனது கடந்த காலங்கள்


இவைகள் எல்லாம் புதைக்கப்படவேண்டும்


எனவே எனக்கொரு கல்லறை வேண்டும்.....


யாராவது அமைத்து தாருங்கள்.............


கஸ்ரோ


எப்படி இது நியாயம் அன்பே.........?


காதல் எனும் மைதானத்தில்

களிப்புடன் விளையாடவே கனவு கண்டேன்

நானும் நீயுமே வீரர்களாய் இங்கு

நடுவர் ஏதும் நமக்கில்லை எங்கும்

தவறாய் ஆட்டத்தை ஆடியதும் நீதான்...

தடுத்து நிறுத்தி போதும் என்ற என்னை

உதைத்து வீழ்த்தியதும் நீதான்...

அன்பே..................

சிவப்பு அட்டை காட்டியதும் நீதான்

எப்படி இது நியாயம் .................??

மேன்முறையீட்டு மனுவும் செய்தேன்

நீதியின்றி உன்னால் நிராகரிக்கவும் பட்டேன்

நடுவர் பார்வையாளர் அற்ற மைதானத்தில்

மூன்றாம் நடுவரையும் நீதான்...

எப்படி இது நியாயம் அன்பே.........?

கஸ்ரோ

Friday, 28 August 2009


உங்ககிட்ட பேசணும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன் ஆனால் பேசறதுக்கு முடியல. நான் 2 வாரத்துக்கு முன்னாடி ஒரு தடவை ........


என்ன avasarm nanparkale konsam wait pannunka

25 விரல்களுடன் காணப்படும் அதிசய சிறுவன்

கொடைக்கானல் அருகே 25 விரல்களுடன் ஒரு அதிசய சிறுவன் உள்ளான்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு சரவணன்(5), ஆறுமுகம்(3) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆறுமுகத்திற்கு முன்பு இரண்டு ஆண் குறிகள் இருந்தன. அதேபோல கைகளிலும், கால்களிலும் மொத்தம் 25 விரல்களு உள்ளன.ஆறுமுகத்திற்கு ஒரு வயதாகும் போது அவனுக்கு இருந்த ஒரு ஆண்குறி டாக்டர்கள் உதவியுடன் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.தற்போது சிறுவனுக்கு, இடது காலில் 7 விரல்கள், வலது காலில் 6 விரல்கள், கைகளில் தலா 6 விரல்கள் என 25 விரல்கள் உள்ளன. இது போன்று கோடிகளில் ஒருவருக்கு இருப்பது கூட அரிது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Thursday, 27 August 2009

நலமாக இருக்கின்றாயா...இருப்பாய் என்றே நினைக்கின்றேன் நலமாக நீ வாழ்வதற்குஎந்தன் வாழ்த்தும் உனை சேரட்டும் மனை மாறி சென்ற உனைமனதால் நினைப்பதும் கூட தவறு என்று தெரிந்த போதும் என் மனதை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லையே ...கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும் உன் நினைவுகளை சுமந்தே செல்கின்றன சுமையாக அல்ல சுகமாக.......
கஸ்ரோ

CASTRO

வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது CASTRO